தந்தை பெரியாருடைய சிந்தனைகளின் பன்முகத் தன்மை அனைத்தும்
இந்த வலைபூவில்
சுருக்கமாக சுட்டப்படும்
**************
சில படைப்புகள்
முழுமையாக வெளியிடப்படும்
*********************************************************************************
முழுமையாக வெளியிடப்படும்
*********************************************************************************
சிந்தனையும் பகுத்தறிவும் – தந்தை பெரியார்
“நான் சொல்வதற்கு முன்பு, உங்கள் அனைவரையும்
கேட்டுக் கொள்வது என்னவென்றால், நான் சொல்வதை நம்பாதீர்கள்; அதன்படி நடக்க வேண்டுமென்று
உடனே இறங்கி விடாதீர்கள்; என்ன செய்ய வேண்டுமென்றால் சொல்லுவதை சிந்திக்க வேண்டும்.
சரியா, தப்பா என்று ஆராய வேண்டும். உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள
வேண்டும் மற்றும் எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும்.
'நாங்கள் சொன்னோம். நான் சொன்னேன்' என்பதற்காக ஒன்றையும், எதையும் ஏற்றுக் கொள்ளக்
கூடாது”
(மேட்டுப்பாளையத்தில் பகுத்தறிவாளர் மன்றத்
துவக்க விழா - 22-06-1971)
ஏன்
சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்? – தந்தை பெரியார்
1) அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர்
எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது.
2) அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில்
ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும்
எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
3) அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும்
எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று
கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
4) அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம்,
தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும்
என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது.
5) அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி
என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு
அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப்
போராடுகின்றது.
6) அது ஒன்றேதான் ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும்
எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு
இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
(புரட்சி - பெட்டிச் செய்தி – 01-2-1933)
பெரியார் கணினி
(முனைவர் மா.நன்னன் தொகுத்தவையில் இருந்து)
1) பகுத்தறிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக