சமதர்மம்
(“சமதர்மம்” என்ற சொல் மிகவும் சகஜமாகிவிட்டதாக 1934 ஆம்
ஆண்டுப் பெரியார் கூறுகிறார். சமதர்ம கொள்கை ஆட்சி அவசியம் என்று சொன்னால் மதக்காரர்களுக்கும்
கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களும் கஷ்டமாயிருக்கிறது என்றுகிறார்.
சமதர்மம் என்பதை முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது பற்றிப்
பேசுகிறது, அதனால் முதலாளிகளே சமதர்மத்தை உண்மையில் எதிர்ப்பர், முதலாளிகளுக்கு உதவிடும்
வகையில் மதப் பிரச்சாரகர்கள் செயற்படுவதால் முதலாளிகளுக்கு அடுத்து மதப் பிரச்சாரகர்கள்
எதிர்ப்பார். ஆனால் பெரியார் முதலாளிகளுக்கு எதிரானதாகக் கருதவில்லை. அதனால் தான்,
சமதர்மம் என்பது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் விரோதமானது என்று கூக்குரலிடப்படுவதாகக்
கூறுகிறார். சமதர்மம் என்பதை முதலாளிகள் எதிர்க்க மாட்டார்கள், அதன் உண்மை தன்மையைப்
புரிந்து ஏற்றுக் கொள்வார்கள் என்பதே பெரியாரின் கருத்தாக இருக்கிறது.
பணக்காரத் தன்மை என்பதை ஒரு மூடநம்பிக்கை என்பதாகவே பெரியார்
புரிந்துள்ளார். மூலதனத்தின் ஆதிக்கத்தைச் சற்றும் புரிந்து கொள்ளவில்லை. முதலாளிகளை
அறிவுரைகளால், அவர்களிடம் உள்ள முதலாளித்துவத் தன்மையான மூட நம்பிக்கையைப் போக்கிவிடலாம்
என்று நினைத்துள்ளார். முதலாளிகளின் கருத்து என்பது மூலதன ஆதிக்கத்தின் வெளிப்பாடு,
தனிச்சொத்துடமையினுடைய வர்க்க தன்மையின் வெளிப்பாடு என்பதைப் பெரியாரால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில்
தெளிவு அவசியமாகும்.)
தந்தை பெரியார்:-
“தோழர்களே! இன்று இக்கூட்டத்தில் “சமதர்மம்"
என்னும் பொருள் பற்றிப் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் பெரிதும்
மகிழ்ச்சியடைகின்றேன். சமதர்மம் என்பதற்குப் பலவேறு தேசங்களிலும், சமூகங்களிலும் பலவேறு
அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும், சில
இடங்களில் கடவுளுக்கும், பிறிதும் சில இடங்களில் பணக்காரனுக்கும், புரோகிதனுக்கும்
விரோதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள
ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியூட்டி ஆவலோடு சமதர்மமொன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும்
என்கின்ற மனப்பான்மையை உண்டாக்கி யிருக்கிறது.
ஆகவே இன்று சமதர்மத்தை
உச்சரிப்பது மிக சகஜமாகப் போய்விட்டது. சமீபத்தில் ராஞ்சியிலும் பாட்னாவிலும் கூடிய
சமதர்மவாதிகளால் சமதர்ம திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. காந்தியாரும் கூட சமதர்மம்
ஆக்ஷேபகரமாளதல்ல என்கிறார். தோழர் ஜவஹர்லால் தான் சமதர்மவாதி என்றும், மக்கள் சமூக
நலனுக்கேற்றது சமதர்மம் ஒன்றே என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
… … …
சமதர்மம்
என்றால் சாதாரணமாக பாரபக்ஷமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத
நிலை என்பதாகும்.
ஆனால் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில்,
வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல்கீழ்நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து, யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால் மதக்காரர்களுக்கும்
கடவுள் நம்பிக்கை கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல்
வருந்தியுழைந்த பின்னும் குடிக்கக் கூழின்றியும் கட்டக் கந்தையின்றியும், குடி இருப்பதற்கு
ஓட்டைக் குடிசைகூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமாள வேலையும் செய்யாது பணக்காரளாக
இருக்கின்ற சந்தர்ப்பத்தால் அக்கிரமமாக அந்தியாக தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்திக்
கொண்டு. தான் மட்டும் படாடோபமாக டம்பாச்சாரித்தளமாக வீண் விரையமாக்குவது சரியல்ல.
எல்லோரும்
கஷ்டப்பட்டு வேலை செய்து பலனை எல்லோரும் சமமாக அனுபவிக்கலாம் என்று சொன்னால் அது முதலாளிருக்கும்.
பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டாதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண்
கூக்குரலிடப்படுகிறது. சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு
வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அது போலவே
ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும் பொருளும் எல்லாம் குடும்ப பொதுச்சொத்து போல்
எல்லா மக்களுக்கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும்
இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து உண்டு, உடுத்தி, இன்பவாழ்வு
வாழ வேண்டுமென்பதுதான் சமதர்மம். மற்றபடி இதில்
பயப்படத்தக்க காரியமும் புரியாத காரியமும் இல்லை.
இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று கூறும் பொழுது சமதர்ம
விரோதிகளாள மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக் குதித்து அது கடவுளுக்காகாது: அவனவன் முன் ஜென்மத்தில்
செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற் போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறாள்.
பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம், அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனிவுரிமை
கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடமை ஆக்கப்படல் அநீதம், கடவுள் கட்டளைக்கு விரோதம்
என்று கூப்பாடு போடுகிறார்கள்.
… … …
பிறமக்கள் உழைப்பதினால்
விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறிகளுக்கும்தான்
சமதர்மம் கசப்பாகவோ வெறுப்பாகவோ விரோத மாகவோ இருக்குமே தவிர அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே
தவிர மற்றபடி உடலைச் சாராகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு
இந்த கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலையை உயர்த்தவல்ல
ஜீவதாது இது என்று தான் கூற வேண்டும்.
… … …
ஏற்றத் தாழ்வுகள் மலிந்த இன்றைய சமூக அமைப்பால்,
ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ சமாதானமோ உண்டு என்று
கூற முடியுமா? இல்லாத ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணியில்லை, இருக்க வீடில்லை, ஓய்வில்லை
பிள்ளைக்குக் கல்வி வசதியில்லை என்பன போன்ற பல ஓயாக் கவலையே கவலையால் சதா வறுமைக் கடலிலே
கிடந்துழல்கிறான். பணம் படைத்த. பூஸ்திதி படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்க
வேண்டும். மேலும் பெருக்க வேண்டும், பிறர் கவராமல் காப்பாற்ற வேண்டும் என்னும் கவலையோடு
பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள்.
… … …
இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்ன, வென்றால் கஷ்டப்பட்டு
உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரளாக
இருப்பதும் ஒரு கௌரவம் என்றும், தனிமதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது
என்றும் கருதுகின்ற ஒரு “மூட நம்பிக்கையே"
தவிர வேறில்லை.
இந்த மூடநம்பிக்கையின்
பயனாய்த்தான், மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது பிறரையும்
அநுபவிக்க விடாது. வைக்கோல் போரைக் காக்கும் நாய் போல் வாழ்கின்றான். இந்தத் தளிவுடமை
வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்காள, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன் படக்கடய பல பொருள்கள்
எதனங்கள் வீண் விரையம் செட்டப்படுகின்றன.
… … …
… … பிறருழைப்பில் படாடோப வாழ்க்கை
நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும், கண்ணியமான, பெருமையான
வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும்
மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 11-15)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக