திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 48:-


பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே

“பணக்காரர்களிடம் காணப்படும் பணத்தின் மீதான மோகத்தைப் பெரியார் ஒரு மூடநம்பிக்கையாகவே பார்க்கிறார். பணம் என்பது செல்வம் அனைத்தையும் குறிப்பிடுவதாகக் கூறுகிறார். பணம்படைத்தவர்கள் தம்மைச் செல்வந்தர் என்று நினைத்துக் கொள்வதும் பிறரால் செல்வந்தர் என்று சொல்லுவதற்கும் தவிர வேறு எந்த நலனும் இல்லை என்று கூறுகிறார்.

தேடியச் செல்வத்தைக் கட்டிக்காப்பதும் தமது வாரிசுகள் இதனைச் சீரழிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை செல்வந்தர்களுக்கு இருக்கு என்பது உண்மை தான். ஆனால் இந்தக் கவலையை முன்வைத்து அவர்களைத் திருத்திவிட முடியும் என்ற நம்பிக்கை பெரியாருக்கு இருக்கிறது. இந்தக் கவலையை வைத்து பணக்காரத் தன்மை ஒரு மூடநம்பிக்கை என்ற முடிவுக்கு வருகிறார்.

தனிவுடைமையின் சிந்தனை வடிவம் தான் பணக்காரத் தன்மை.

இந்தப் பணக்காரத் தன்மையை ஒரு மூடநம்பிக்கை என்ற விளக்கத்தின் மூலம் தனிவுடைமைச் சிந்தனையை அழித்துவிட முடியாது. ஆனால் பெரியார் எல்லோரும் சரிசமம் என்னும் பகுத்தறிவுச் சிந்தனையின் விளக்கத்தால் இதனைப் போக்கிவிட முடியும் என்று கருதியுள்ளார்.

தனிச்சொத்துடையின் ஆதிக்கத்தை வர்க்கப் பார்வையில் அணுகினால் தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும், வர்ணப் பார்வை என்கிற பகுத்தறிவுப் பார்வையில் அணுகினால் பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையாகத் தான் தெரியும்.”

தந்தை பெரியார்:-
மனிதளைப் பிடித்து வாட்டும் மூடநம்பிக்கைகளில் பணக்காரத் தன்மையும் ஒரு மூடநம்பிக்கையேயாகும். இந்தப் பணக்காரத் தன்மை மூடநம்பிக்கையானது மத சம்பந்தமான மூடநம்பிக்கைகளைவிட மிக முக்கியமாளதும் மோசமானதுமாகும்.

பணம் இல்லாவிட்டால் கடவுளுக்குக் கூட வேலை இல்லை என்று முடிவு கட்டிவிடலாம். பணமே கடவுளுணர்ச்சிக்கும் முக்கியமாய் மத உணர்ச்சிக்கும் மற்றும் பல மூடநம்பிக்கை உணர்ச்சிக்கும் மூல காரணமாய் இருக்கிறது. பணம் என்று சொல்லுவது செல்வம் என்பதின் கீழ் வரும் எல்லாவற்றையும் பொறுத்தது. அச்செல்வத்தன்மைக்கு அடிப்படையானது புகழ் ஆசை என்று தான் சொல்ல வேண்டும். அப்புகழ் ஆசை என்பதும் வெறும் சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்டதே தவிர மற்றப்படி செல்வ சம்பந்தமான புகழில் ஆசையில் வேறு எவ்வித பகுத்தறிவும் காண முடியவில்லை.

சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிக்கக் கூடுமானாலும் அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையில் பட்டதேயாகும்.

மனிதனுக்கு சுயநலமும் புகழ் ஆசையும் இல்லாமல் இருக்காது என்பது ஒரு அளவுக்கு உண்மைதான். ஆனால் அதற்கு சாதனம் செல்வம் சேர்ப்பது என்பது இயற்கையாய் ஏற்பட்டதல்ல என்போம். ஒரு மளிதன் மேல்லோகத்தில் போய் சுகமாய் (மோட்சத்தில்) இருக்க இந்த லோகத்தில் கடவுள் தயவும் புண்ணியமும் சம்பாதிக்கலாம் என்று சில காரியங்கள் செய்ய எப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறானோ, அது போலவே தான் சுயநலத்துக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதை சாதனமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவனுக்கு முன் பிறந்த மற்ற எல்லோரும் செய்வதைப் பார்த்து இவனும் செய்கிறான். அதனால் அச்செல்வம் தேடி செலவழிப்பதால் ஏதோ சில சௌகரியங்கள் ஏற்படுவதாக கருதிக் கொள்ளுகிறான். மற்றவனும் இவனை பெரியவனாக மதிக்கிறான் என்றாலும் இச்செல்வத்தால் உண்மையில் எவ்வித பலனும் அடைவதில்லை.
… … …
செல்வவான் என்று நினைத்துக் கொள்வதும் பிறர் இவனை செல்வவான் என்று சொல்லுவதும் தவிர செல்வவானுக்கு வேறு என்ன நலம் இருக்கிறது என்று பார்த்தால் அதிலுள்ள மூடநம்பிக்கை நன்றாய் விளங்கும். செல்வவான் அல்லாத சாதாரண மளிதன் அதாவது வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டும்படியாள ஒரு சம நிலையுள்ள மனிதன் இன்னமும் தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால், தன்னுடைய தேவைகளுக்காக தன் வருமானமல்லாமல் மற்றொருவனைப் போய் கெஞ்ச வேண்டிய அவசிய மில்லாத மனிதனின் நிலைமையை விட செல்வவான் என்கின்றவன் நிலைமை எந்த விதத்தில் மேலானது - நன்மையானது என்பதை யோசிப்போம்.
… … …
செல்வம் படைத்ததின் பலன் தனக்குப் பிறகு இந்தச் செல்வம் என்ன கதி ஆவது என்கின்ற கவலையானது மற்றொரு பெரும் பாகமான கவலைக்கு இடமானது. எதிர்பாராத வார்சுகள் ஆண் பிள்ளையோ பெண்பிள்ளையோ அல்லது இரண்டு மில்லாமல் எவனுக்கோ பிறந்த தத்துப்பிள்ளையோ என்பதொருபக்கமிருக்க ஆண் பிள்ளையாளால் எத்தனை பேர்கள்? பெண்பிள்ளையானால் எத்தளை பேர்கள்? அவர்களுக்கு வரும் பெண்ஜாதி புருஷன்மார் யார்? அவர்கள் இச் செல்வத்தை எப்படி அனுபவிப்பார்கள்? எத்தளை நாளைக்கு வைத்து இருப்பார்கள்? தான் எத்தனை நாள் எவ்வளவு கஷ்டப்பட்டு எந்த எந்த வழியில் தேடிய செல்வத்தை எத்தனை நாளில் எந்த எந்த வழியில் பாழாக்கி விடுவார்கள்? என்கின்ற கவலை லேசானதல்ல என்பது மாத்திரமல்லாமல் அந்தச் செல்வங்கள் 100-க்கு 75 விகிதம் ஒரு செல்வவாள் முன்பாகவே மற்ற செல்வவான் செல்வம் அவள் பிள்ளைகளால் பாழாக்கப்படுவதையும் பார்க்கக்கூடியதாகவே இருக்கிறது.

அன்றியும் கஷ்டப்பட்டு தேடிய செல்வவான், தேடிவைப்பதிலேயே கவலையாய் இருந்துசாக அவன்பின் வாரிசு ஒருபாடும்படாமல் அதை அல்லது அதன் அனுபவத்தை தான் ஒரு செல்வவான் என்கின்ற உணர்ச்சியிலேயே அனுபவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து வருகிறான். தத்துக்கு வருகிறவன் புதையல் எடுத்தது போல் அனுபவிக்கிறான்.

ஆகவே செல்வமானது செல்வவானுக்குப் பின்னால் இந்தப்படி யெல்லாம் ஆவதில் செல்வவானுக்கு ஏற்படும் பயன் என்ன? எவ்வளவோ கஷ்டம் - கவலை - தொல்லை ஆகியவைகள் அனுபவித்துப் பொருள் தேடியதற்கு இதுதான் பயன் என்றால் சொத்து சேர்ப்பது என்பது ஒரு மூடநம்பிக்கை அல்லது குருட்டு பழக்க வழக்கத்தில் பட்டது என்பதில் என்ள ஆட்சேபணை இருக்கின்றது என்று கேட்கின்றோம்.
… … …
மோக்ஷத்தை விரும்புவது எப்படி மூடநம்பிக்கையோ அதுபோல் தான் செல்வத்தையும் அதனால் ஏற்படும் புகழையும் விரும்புவதாகும் என்று சொன்னோம். ஆனால் அது நடைபெறுவதற்கு காரணம் அரசாங்கமும் சமூகக் கட்டுபாடும் என்றும் காட்டினோம். அரசாங்கமும் சமூகக் கட்டுப்பாடும் தனி உடமை தத்துவமான முறையில் இருக்கிறபடியால் அவை நடக்க முடிகின்றது.

வேதாந்த முறை என்பது போன்ற பொது உடைமை தத்துவ முறையுள்ள அரசாங்க ஆட்சியும் சமூக கட்டுப்பாடும் உள்ள இடத்தில் சுயநலத்துக்கும் புகழுக்கும் செல்வம் சேர்த்து பணக்காரன் ஆகிறது என்கின்ற தத்துவம் சாதனமாய் இருக்க முடியவே முடியாது. அங்கு எப்படி மதவாதிகள் நாஸ்திகர்களை வெறுத்து குற்றவாளியாக ஆக்குகிறார்களோ அதுபோல் பணக்காரத்தன்மையை வெறுத்து குற்றவாளியாக்கி தண்டிக்கச் செய்கிறார்கள்.
… … …
பணக்காரத்தன்மை மூட நம்பிக்கையிலும் குருட்டுப் பழக்க வழக்கத்திலும் பட்டது என்பதும், பணக்காரன் என்று இல்லாமல் எல்லோரும் சரிசமம் என்னும் தன்மை பகுத்தறிவில் பட்டது என்பதும் விளங்கும்.
(குடி அரசு - தலையங்கம் - 06.03.1936)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 84/89)
                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக