வியாழன், 6 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 04:-

இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
தொழிலாளர்களும் மக்கள் கடமையும்
(குடிஅரசு- 30-05-1926)

“நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும், அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களை தொழிலாளர் சங்கத்தில் தலைவர்களாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு தனியாக தொழிற்கட்சி என்பதாக ஒரு கட்சி அரசியல் தத்துவத்தோடு இருக்க வேண்டும் என்றும் எவ்வளவோ தடவை வெகு அழுத்தமாக வற்புறுத்தி வந்திருக்கிறோம். இவ் வலியுறுத்தலுக்கு நாகைத் தொழிலாளர் சங்கத்தாரே கொஞ்சம் காது கொடுத்து வந்தனர். மற்றபடி மற்றத் தொழிலாளர்களும் தொழிலாளர்களுக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல அரசியல் வாழ்வுக்காரர்களும் நம்மீது பாய்ந்து வந்தனர்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I- பக்- 34)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக