விஷம்:- ஓ கள்ளே! நீ என்ன மகா
கெட்டிக்காரன்போல் பேசுகிறாய், ஒரு கடுகளவு ஒரு மனிதனுக்குள் பிரவேசித்தேனேயானால் உடனே
அவன் உயிரை வாங்கி பிணமாக்கிவிடுவேன். நீ பீப்பாயளவு உள்ளே போனாலும் ஒன்றும் செய்வதில்லை.
கள்ளு:- அப்படியா, உன்னால் என்ன
செய்யமுடியும்? ஒரு மனிதன் உயிரை மாத்திரம் தான் வாங்கமுடியும். இது யாரும் செய்து
விடுவார்கள். என் சங்கதியைக் கேள். நான் ஒரு மனிதனுக்குள் சென்றேனேயானால் அவன் புத்தி,
மானம், சொத்து இவ்வளவையும் பிடுங்கிக் கொள்வதோடு உயிர் இருக்கவே பிணமாக்கிவிடுவேன்.
இது உன்னாலாகுமா?
(குடிஅரசு - உரையாடல் - 16.08.1925)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக