வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

பணக்காரர்களை நீங்கள் ஆதரிக்கலாமா? – தந்தை பெரியார்


(பார்ப்பனர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று தான் பெரியார் கருதினார். பார்ப்பனர்களை இறுதிவரை எதிர்த்த பெரியார் பணக்காரர்களை அவ்வாறு எதிர்க்கவில்லையே)


(திருவாரூரில் கேள்விகளுக்கு ஈ.வெ.ரா. பதில்)

“பணக்காரர்களை நான் ஆதரிப்பது சமதர்மத்துக்கு அடுக்குமா என்று கேட்கிறீர்கள்.

பணக்காரர்களை ஒழிக்கும் நிலையில் நான் இல்லை. ஏனென்றால் காங்கிரசானது பார்ப்பனர்களை காப்பதற்கு இருக்கிறது என்பதுடன் இரண்டாவதாக தங்கள் அடிமைகளான பணக்காரர்களை காப்பாற்றுவதற்கு ஆகவே இருக்கிறது.

ஜம்னாலால் பஜாஜ், பிர்லா, கோஸ்வாமி, சிவப்பிரகாஸ் குப்தா, ஜமால் மகமது, நாடீ முத்துபிள்ளை , சுப்பராயன், ராமலிங்கம் செட்டியார் போன்ற நூற்றுக்கணக்கான மக்களை ஆதரித்து அவர்களுக்கு பதவிகள் சம்பாதித்து கொடுக்க கூலிவேலை செய்யும்போது நான் எப்படி பணக்காரர்களை ஒழித்து விட முடியும்? நாள் விரட்டியடிக்கும் பணக்காரர்கள் எல்லாம் காங்கிரசை தஞ்சமடைகிறார்கள். அவர்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

ஆதலால் காங்கிரஸ் ஒழியாமல் பணக்காரர்கள் ஒழிக்கப்படமாட்டார்கள். நான் பணக்காரர்களை ஒழிக்க வேலை செய்தேனேயானால் பணக்காரர்களால் காங்கிரசுதான் லாபமடைகிறது.

ஆகவே பணக்காரர்கள் ஒழிக்கப்படுவதற்கு முன் பார்ப்பனீயம் ஒழிக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.”
(குடிஅரசு 24-01-1933)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக