செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

7) தொழிலாளர்கள் – பொது – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

28.7.1 அரசாங்கம் முதலாளிகளுக்கு அனுசரணையாக இல்லையானால் தொழிலாளிகளின் சமூகத்தை எதிர்த்துத் தனிப் பட்ட முதலாளிகள் எத்தனை நாள் வாழ முடியும்?

28.7.2 தொழிலாளிக்கும் முதலாளிக்கும் ஒழுக்கம், நாணயம் ஏற்படுவதால் பொது மக்களுக்கும் நன்மை ஏற்படும். எப்படியெனில் உற்பத்தியாகும் பண்டம் நன்றாகவும் உறுதி யானதாகவும் விலை குறைவாகவும் இருக்கும். உற்பத்தியும் அதிகமான அளவில் பொறுப்புடன் செய்யப்படும். எனவே பொது மக்களுக்கு இதனால் நன்மை ஏற்படும்.

28.7.3 நம் நாட்டில் தொழிலுக்கு மதிப்பு இல்லை ; முதலுக்குத்தான் மரியாதை தருகிறார்கள். தொழில் செய்கிற வனுக்கு - தொண்டு செய்கிறவனுக்கு - மதிப்பு இருக்க வேண் டும். சம உரிமை இருக்க வேண்டும்.

28.7.4 இரயிலிலோ தொழிற் சாலையிலோ காரியம் ஆற்றுவது யாருக்காகச் செய்கின்றான்? பொது மக்களுக்குத் தானே! மனிதனுக்காக - மனிதச் சமுதாயத்துக்காகச் செய்பவன் நல்ல முறையில் செய்தால் எவ்வளவு விரைவில் சமுதாயம் முன்னேறும்.

28.75 மே தின விழா என்றால் தொழிலாளர் விழா என்பது பொருள். தொழிலாளியாகப் பார்ப்பான் யாராவது இருக் கின்றானா? மண் வெட்டி எடுக்கின்றானா; மூட்டை தூக்கு கின்றானா; நெய்கின்றானா - எல்லாம் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம்தானே செய்கிறோம். எனவே மே விழா என்பது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு ஏற்ற விழாவாகும். இந்த விழாவில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு என்ன என்ன கேடுகள், குறைபாடுகள் இருக்கின்றனவோ அவைகளைப் பரிகரிக்க முற்பட வேண்டும்.

தொழிலாளர் – தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக