வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புரட்டு! சுத்தப் புரட்டு! – தந்தை பெரியார்


(ஏகாதிபத்தியத்தின் கொள்ளையை நியாயப்படுத்துவது நாட்டுக்கு கூடுதல் தீங்காய்தான் இருக்குமே தவிர, எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை பயக்காது. ஏகாதிபத்தியத்தினால் மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி பெரியார் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இறுதி விடுதலையைப் பற்றி மட்டும் பேசிவிட்டு, அன்றைக்கான போராட்டத்தை மறுதலித்துள்ளார். இறுதி வெற்றிக்கான போராட்டத்திற்கு அன்றைக்கான போராட்டம் அதாவது தேசியவிடுதலைக்கானப் போராட்டம் அவசியமாகிறது. இறுதி வெற்றிக்கு பெரியார் சொல்வது போல் தேசியவிடுதலை தடையாவதில்லை. இந்தப் போராட்டத்தின் வழியே தான் இறுதி வெற்றியை அடைய முடியும்.)

நமது செல்வத்தை அன்னிய நாட்டார் கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப் புரட்டு.

நமது செல்வத்தை கொள்ளையடித்து நம்மைப் பட்டினிப்போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர், வட்டிக் கடைக்காரர் ஆகியவர்களுமே யாவார்கள்.

அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம் முடையதல்ல.

நம்மை கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக் கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்தக் கூட்டங்களை ஒழித்தால்தான் நமது செல்வம் நமக்குக் கிடைக்கும்.

அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

இப்படிக்கு 100 க்கு 90 மக்களாகிய
தொழிலாளிகள், வேலையாளர்கள்,
கூலியாட்கள், பண்ணையாள்கள்,

(குடி அரசு - பெட்டிச்செய்தி - 25.10.0931)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக