(கம்யூனிசம் தானே வரும் என்கிறார்
தந்தைப் பெரியார். பலாத்காரத்தையும் மறுத்துவிட்டார், இடைப்பட்ட காலத்தில் செய்ய வேண்டிய
சீர்திருத்தப் போராட்டத்தையும் “ஒருவன் சட்டைப் பையில் இருப்பதை இன்னொருவன் எடுப்பதுபோல்,
ஒருவன் நிலத்தில் மற்றொருவன் பிரவேசிப்பதால் இது ஆகிவிடாது” என்று மறுத்துவிடுகிறார்.
பார்பானை ஒழிப்பது வரையிலும் கம்யூனிச ஆட்சி வருகிற வரையிலும் என்ன செய்ய வேண்டும்
என்பதை தந்தை பெரியாரிடம் கேட்டு பயன் ஏதும் உண்டா?
பெரியாரிஸ்டுகள் வர்ணப் போரை நடத்துவர், பெரியாரிய கம்யூனிஸ்டுகள் என்னப் போரை நடத்துவார்கள். வர்க்கப் போரை தள்ளிப் போட முடியுமா என்ன?)
“நம் நாட்டிலும் கம்யூனிஸ்டுக்காரர்கள் இருக்கிறார்கள்; இவர்கள்
தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடைமையைச் சாதனமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்க ளே
ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை; பொதுவுடைமை என்றால் மக்களுக்கும் ஒன்றும்
தெரியாது.
எனவே, நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால் தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித் தின்னும் இந்தக் கம்யூனிஸ்ட்டுகளின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது. அரசாங்கத்தைக் கைப்பற்ற ஆட்சி இந்தத் துறையில் ஈடுபட்டால் தான் மார்க்கம் ஏற்படும். ஒருவன் சட்டைப் பையில் இருப்பதை இன்னொருவன் எடுப்பதுபோல், ஒருவன் நிலத்தில் மற்றொருவன் பிரவேசிப்பதால் இது ஆகிவிடாது.-1972”
(பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் 1974 – கம்யூனிசம் - பக்கம் 1766)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக