முக்கியமான வேண்டுகோள்
இவ்வருஷக்
கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கையை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில்
கணக்கெடுப்பவர்கள் உங்களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்
படுவீர்கள். அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம்
தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது
என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஏனெனில்
ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய்
வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலையும்
சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.
அதுபோலவே
இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள்
தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும்
மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள்
என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கு அடிமைகள், அவர்களது
தாசிமக்கள் என்கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதை யுள்ள எவரும்
தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்கு திருடன்,
அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஈ. வெ. ரா.
(குடி அரசு - 09.11.1930)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக