(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை-
நூலின் “பெயர் பெரியார் கணினி”)
30.4.1
நாத்திக விசயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் மதப் பிரச்சாரத்தினால்
வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரசாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க்
கொண்டவர்களும் தவிர, மற்றவர் களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து
வருகின்றது. பொது சனங்களில் நாத்திகத்தைப் பற்றி எந்தக் கூட்டத்திற்காவது சிறிது அதிருப்தி
இருக்கும் என்று கருத வேண்டுமானால் - அது, போதிய கல்வி அறிவு பெறாத சமூகமும், முரட்டுக்
கட்டுப்பாட்டுக்குள் இருந்துவரும் பிடிவாதச் சமூகமும், தங்களைத் தவிர வேறுவித உலக அபிப்பிராயம்
இருக்கின்றது என்றுகூட உணர முடியாமல் வைக்கப்பட்டிருக்கும் பாமரக் கூட்டச் சமூகமும்
ஆகியவர்களுக்குள்ளாக இருந்து வரலாம்.
130.4.2
இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும்
செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும்
செய்வதில் கடவுளுக்குத்தா னாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள்தனமான
காரியத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தைச்
செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத் தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும்
மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.
30.4.3
மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க
வேண்டும் என்று சொன்னாலும் அதை நாத்திகம் என்று சொல்லிவிடு கிறார்கள். அதனால்தான் சமதர்மம்
பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீர வேண்டியிருக்கிறது.
30.4.4
நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ
இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.
30.4.5
என்னய்யா அக்கிரமம்; நீ சயன்சு படிக்கிறாய்; தத்துவச் சாத்திரம் படிக்கின்றாய்; நெற்றியில்
சாம்பல் பட்டை போட்டிருக்கின்றாயே என்றால் சிறிதும் தயக்க மில்லாமல் அதற்கும் இதற்கும்
என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா என்று கேட்கிறான்.
30.4.6
தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக்கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள்
என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி
வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மை யான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக
இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.
30.4.7
கடவுள் இல்லை யென்று கூறியவர்களின் மனைவிகளைக் கற்பழிக்க வேண்டும் என்று ஆத்திகம் திட்டியது
போல நாங்கள் கடவுள் உண்டு என்று கூறுகின்றவர்களின் மனைவிகளைக் கற்பழிக்க வேண்டும் என்று
கூறுகின்றோமா? இல்லையே! அவர்களின் மனைவிமார்களையும் தாயாராகத்தான் மதிக்கிறோம்; மரியாதை
பண்ணுகிறோம்.
30.4.8
துறவிக்கு மதம் ஏது? ஞானிக்குச் சமயம் ஏது? கடவுள் ஏது? வேதாந்திக்கு மதம் ஏது? கடவுள்
ஏன்? சகலத்தையும் துறந்தவர்தானே துறவி? சகலத்தையும் சரி என்று எண்ணு கின்றவர்கள் தானே
ஞானி? சகலமும் மித்தை, பொய், மாய்கை என்று எண்ணு கின்றவன்தானே வேதாந்தி என்பவன்? இவைகளை
உலகம் ஒப்புக் கொள்கின்றதா இல்லையா? அங்ஙனமாயின் இம் மூவர்களும் நாத்திகர்களா என்று
கேட்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக