செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

6) தொழிலாளர் முதலாளி– தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

28.6.1 சரீரத்தினால் வேலை செய்யும் ஆட்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக் குட்பட்ட சீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்து விட்டு அவ் வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லை யின்றி அனுபவிப்பவர்கள் (முதலாளிகள்.

28.6.2 எவன் ஒருவன் எந்தப் பொருளையும் தான் செய்யா மல், செய்தவன், மேலும் செய்ய, சீவனத்துக்கு மாத்திரம் ஏதோ சில பணத்தைக் கொடுத்து, அந்தப் பொருள்களைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு, தன்னுடைய வயிற்றிற்கு எவ்வளவு போதுமானது என்பதைப் பற்றி லாபம் பார்க்காமல், நிலைமைக்கு ஏற்பத் தன் இஷ்டப்படி விலை சொல்லி, வாங்கிக் கொள், இல்லாவிட்டால் போ என்று கூறும் நிலையி லிருக்கிறானோ அவன்தான் முதலாளி எனப்படுபவன்.

28.6.3 இலட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் பொருளைச் சேர்த்து மூட்டை கட்டி வைத்திருப்பவன் முதலாளி இல்லை. தன் உழைப்பைத் தன் வாழ்க்கைக்கு மட்டும் பண்ட மாற்றாக விற்பவன் தொழிலாளி என்பது போல் அதற்கு நேர் மாறானவன் முதலாளி. எல்லாம் யோசித்துப் பார்த்து அதற் கேற்றபடி செருப்புக்கு விலை கொடுங்கள் என்று கேட்பவன் தொழிலாளி. இந்த செருப்பு அய்ந்து ரூபாய் வேண்டுமானால் வாங்கு, இல்லையேல் போகலாம் என்று கூறுகிறானே அவன்தான் முதலாளி.

தொழிலாளர் – தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக